தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் சேர்த்து வைத்த வனத்துறை
கேரளாவில் தாயைப் பிரிந்த நிலையில் ஊருக்குள் வந்த ஆறு மாத குட்டி யானை மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டி இருக்கிறது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வழிக்கடவு பகுதி. வழிக்கடவு அருகே உள்ள நெல்லிகுத்து பகுதியில் தாயைப் பிரிந்த நிலையில் ஆறு மாதம் மதிக்கத்தக்கக் குட்டி யானை ஒன்று நீரோடையை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
மக்களைக் கண்ட குட்டி யானை அவர்களை விரட்டி இருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். தாய் யானை அதே பகுதியில் இருப்பதைக் கண்டறிந்த வனத்துறையினர் குட்டியை அதனுடன் சேர்த்தனர்.