அத்துமீறி வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்தவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறை

முதுமலை புலிகள் காப்பக சிங்காரா வனப்பகுதியில் அனுமதியின்றி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2021-09-05 08:52 GMT

வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த இருவருடன் வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் இரவில் அத்துமீறி வனப் பகுதிக்குள் சென்ற நான்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா 5 ஆயிரம் வீதம் நான்கு பேருக்கு 20 ஆயிரம் அபராதமும் வாகன ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளரை வனத்துறையினர் பிடித்தனர்.

வாகன ஓட்டுநரும் உரிமையாளரும் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறு காரணமாக இரவில் வனப்பகுதிக்குள் செல்வதும் வாகன ஓட்டிகள் சிலர் அவர்களை அழைத்துச் செல்வதும் மீண்டும் தொடர்ந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News