கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள் அச்சம்
நீலகிரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்.
கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாள் தோறும் கூடலூரிலிருந்து மைசூருக்கும், மைசூரிலிருந்து நீலகிரிக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி எனும் பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற வனக்குழு சாலைகளில் இருபுறம் செல்லும் வாகனங்களை நிறுத்தி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகனங்கள் ஒலி எழுப்பவும் இடையூறு செய்யும் விதமாக ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.