பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு செய்யும் காவலர்

கூடலூர் பகுதியில் போலீஸ்காரர் மஞ்சுநாத் என்பவர் சினிமா பாடல்களை போல கொரோனா தடுப்பு குறித்த பாடல்களை பாடி வருகிறார்.

Update: 2021-04-22 11:09 GMT

கூடலூர் காவல் துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் பாடி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது . பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் கிராமம், கிராமமாக சென்று கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் போலீஸ்காரர் மஞ்சுநாத் என்பவர் ஒலிபெருக்கி மூலம் சினிமா பாடல்களை போல கொரோனா தடுப்பு குறித்த பாடல்களை பாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

Tags:    

Similar News