யானை வழித்தடங்களில் இயங்கும் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது குறித்துஆய்வு

யானை வழித்தடத்தில் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆய்வு

Update: 2022-03-21 13:15 GMT

யானை வழித்தடத்தில் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் இயங்கும் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான மூன்று உறுப்பினர் குழு இன்று சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம் , மசினகுடி பொக்காபுரம் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

விதிமுறைகளை மீறி இப்பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களால் யானைகளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததையடுத்து இக்குழு இரண்டாம் கட்ட ஆய்வை இன்று மேற்கொண்டது. 

சீகூர் பள்ளம், , மாவனல்லா, மசினகுடி பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 224 சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் அளித்த பிரமாண பத்திரங்கள் மேல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது .

நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநருமான திருமதி இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அலுவலர்கள் உயர்மட்ட குழுவிற்கு பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News