உதகை அருகே பொக்காபுரம் கோவில் திருவிழா நிறைவு
உதகை அருகே பொக்காபுரம் கோவில் திருவிழா, கடந்த 4 ம் தேதி துவங்கி, இன்றுடன் முடிவடைந்தது.;
உதகை அருகே, சூலூர் பேரூராட்சிக்குட்பட்டஆண்டு தோறும் பொக்காபுரம் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து, திருத்தேர் பவனி மற்றும் மறுபூஜை விழா உள்ளிட்டவை, கமிட்டி குழு மூலம் சிறப்பாக நடைபெற்றது.
பொக்காபுரம் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக, திமுக ஒன்றியச் செயலாளர் துரை கலந்துகொண்டார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டி.கே. மூர்த்தி, மாவட்ட விவசாய அணி தொழிலாளர் அணி கவுன்சிலர், சுகாதார ஆய்வாளர் கே.டி. மூர்த்தி, கூட்டுறவு வங்கி உதவியாளர் ரமேஷ் உட்பட விழா கமிட்டியினர் பலர் கலந்து கொண்டனர்.