கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் மீண்டும் புலியின் கால் தடம் கண்டறிந்ததால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.;
கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே விநாயகன் என்ற காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில், இன்று புலியின் கால் தடத்தை கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே T 23 புலி நடமாட்டம் இதே பகுதியில் இருந்து வந்த நிலையில் அந்தப் புலி வனத்துறையினர் பல நாட்கள் போராடி பிடித்து மைசூர் வன உயிரியல் பூங்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.