ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்;
ஒவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 5வது வார்டு சேர்ந்த திமுக வேட்பாளர் சித்ராதேவி தலைவரானார்.
துணைத்தலைவர் இடம் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து 18-வது வார்டு வேட்பாளர் செல்வரத்தினம் போட்டியிட்டு 13 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.