இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்
இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த 3 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ_பாஸ் பெற்று வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பந்தலூர்அருகே எருமாடு பஜார் பகுதியில் துணை தாசில்தார் சதீஷ் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து இ-பாஸ் பெறாமல் 3 கார்கள் வந்தன. அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த கார்களை இயக்கி வந்த மூன்று பேருக்கு, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.