நீலகிரியில் கனமழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-26 02:00 GMT

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர்,தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஆங்காங்கே,  சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில்,  தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கூடலூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடலூரில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில்,  பல இடங்களில் மரங்கள் விழுந்து அதை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பந்தலூர் தேவாலா கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மிக கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News