கூடலூரில் காணாமல் போன நபர் தேயிலை தோட்டத்தில் பிணமாக கண்டெடுப்பு

இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்த நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2021-08-03 11:07 GMT

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் பிணம் கிடப்பதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், விசாரணை நடத்தியதில் தேவாலா போக்கர் காலனியை சேர்ந்த அபீப்(51) நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்று திடீரென மாயமானதால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அபீப் தேவாலா அருகே காட்டிமட்டம் பகுதியில்உள்ள தேயிலை தோட்டத்தில் பிணமாக கிடந்துள்ளார் என்பது தெரியவந்து. உடனடியாகதேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அபீப்பின் உடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக தெரிவித்தனர். இதனால் போலீசார் அபீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அபீப்பின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.

Tags:    

Similar News