கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

நாடுகானி பகுதிகளில் கடைகள்,வீடுகளை சேதப்படுத்திவரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலையிலிருந்து கும்கி யானைகள் விரைந்தன.

Update: 2021-08-26 15:09 GMT

தேவாலா நாடுகானி பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திவிடும் காட்டு யானை பிடிப்பதற்கு முதுமலையில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

தேவாலா நாடுகானி பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திவிடும் காட்டு யானை பிடிப்பதற்கு முதுமலையில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா பொன்னூர் நாடுகாணி புளியம்பாறை போன்ற பகுதிகளில் இரண்டு கடைகள் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளை தொடர்ந்து காட்டு யானைகள் சேதப்படுத்தும் வந்த நிலையில் பகுதி மக்கள் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காட்டு யானையை கிராமப் பகுதியிலிருந்து விரட்டவும் அதனை பிடிப்பதற்காகவும் முதுமலையில் இருந்து மூன்று கும்கி யானைகள் (சுஜய், சீனிவாசன்,பொம்மன்,) வரவழைக்கப்பட்டன .

அந்த யானைகள் இன்று பொன்னுர் பகுதியில் காட்டு யானையை இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து காட்டு யானையை தேடும் பணிக்காக கும்கி யானைகள் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டன.

Tags:    

Similar News