உதகை கோவில் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
பொக்காபுரம் தேர் திருவிழாவில், கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.;
உதகை பொக்காபுரம் தேர் திருவிழாவில் ஐந்து நாட்கள் நடைபெற்று, இன்று நிறைவடைந்தது இதில் ஆரம்ப நாள் முதலே, சித்தா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்கள், ச பிரபாகரன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கி வந்தனர். ஐந்து நாட்களாக கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க கபசுரக் குடிநீர் வழங்கியது மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் முகக் கவசங்கள் வழங்கி நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அனைவரும் வழி நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டதோடு, கடந்த 5 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டதாக, மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.