முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி முதுமலை மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது.;

Update: 2022-02-26 08:05 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதனால் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது. மரங்களில் இருந்து உதிரும் சருகுகள் சேர்ந்து எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.  இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

அதை தடுக்கும் வகையில் மசினகுடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் இந்த தீ தடுப்பு கோடுகளை வரைந்து வருகின்றன. சாலையில் இருபுறமும் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், இந்த நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News