நீலகிரியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான இன்னசென்ட்திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2021-03-25 17:00 GMT

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில், நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்2021-ஐ முன்னிட்டு, கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மசினகுடி ஊராட்சிஒன்றிய மேல்நிலைப்பள்ளி, மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கார்குடி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் .இன்னசென்ட்திவ்யா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்ததாவது

இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, 06.04.2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும், தேர்தல் ஆணையம் கொரோனா நோய் தொற்று காரணத்தினால், 1050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை, இரண்டாக பிரித்து, துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்திட தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்திட தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று தற்காலிக கூடாரம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் நேரில் பார்வையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக,வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி, குடிநீர், மற்றும் தேவையான மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அலுவலர்களுக்கு

அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் .ராஜ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News