கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் புலி இன்று கண்ணில் தென்பட்டும் பிடிக்க முடியாமல் போனதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.;

Update: 2021-09-27 14:30 GMT

சுற்றித்திரியும் புலி.

கூடலூர் அருகே கடந்த 4 நாட்களாக தேவன் எஸ்டேட் பகுதியில் உலா வரும் புலி கால்நடைகளை அடித்துக் கொன்று வருகிறது. இதற்காக புலியை பிடிக்க வனத்துறை குழுவும், மருத்துவக் குழுவும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் கிரேட் எஸ்கேப் ஆனது. தொடர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் கேரளாவில் இருந்து வந்திருக்கும் வனக்குழுவும், தமிழக வனத்துறையும் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணில் பட்டும் புலியை பிடிக்க முடியாத நிலையில், மீண்டும் புலி கண்ணில் தென்படுமா என வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News