தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்த்த வனத்துறையினர்
கூடலூர் அருகே வனப்பகுதியில் குட்டி யானை கூட்டத்தை பிரிந்து சிறிய குழியில்விழுந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
கூடலூர் அருகே தாயிடமிருந்து பிரிந்து வந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்த்த வனத்துறையினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட நாடுகாணி வனச்சரகத்தில் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் குட்டி யானை கூட்டத்தை பிரிந்து சிறிய குழியில் விழுந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். சிறிது தூரத்தில் 7 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று வனப்பகுதியில் இருப்பதையும் கண்காணித்து உள்ளனர். இரவு நேரத்தில் வந்த யானை கூட்டம் குட்டி குழிக்குள் விழுந்து விழுந்து கிடப்பதை கவனிக்காமல் சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த குட்டியை மீட்ட வனத்துறையினர் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாலை இந்தக் குட்டியானை கூட்டத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.