புலியை வெளியே கொண்டு வர பசு மாட்டை கட்டி வைத்த வனத்துறையினர்
சிங்காரா வனபகுதியில் பதுங்கி இருக்கும் T 23 புலியை பிடிக்க பசுமாட்டை கட்டி வைத்து காத்திருக்கும் வனத்துறையினர்.;
13 நாட்களாக T 23 புலியை பிடிக்க வனத்துறையினர் மிகத்தீவிரமாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலமும் புலியை தேடி வருகின்றனர். தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஏற்கனவே கூறியிருந்த அறிவியல் சார்ந்த ரீதியாக புலியை பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த நிலையில் இன்று அதிகாலை முதல் வனக்குழு புலி இருக்குமிடம் கண்டறியப்பட்ட பரணில் அமர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரணில் அந்தந்த குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என வனத்துறை தெரிவித்துள்ள நிலையில் தற்போது புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடத்தில் பசு மாட்டை கட்டி வைத்து புலியை வெளியே கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.