கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு பகல் பாராமல் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளை முற்றுகையிடும் யானைகளால் எந்நேரம் வேண்டுமானாலும் உயிர்பலி ஏற்படலாம் என்ற அச்சத்தோடு மக்கள் இருந்துவரும் நிலையில், பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் இரவில் வீட்டை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். எனவே உடனடியாக வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.