கூடலூரில் மீண்டும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வேடன் வயல் பகுதியில் உலா வந்த காட்டு யானை வீட்டை சூறையாடியது.;

Update: 2021-11-23 02:16 GMT

சேதமடைந்த வீடு.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராமப் பகுதிகளில், யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயப் பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால்,  ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் உயிர் போகும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் பாடந்துறை பகுதியில் வீட்டை சூறையாடிய காட்டு யானை,  இன்றும் வேடன் வயல் எனும் பகுதியில் வீட்டை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக,  வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

ஒவ்வொரு நாளும் வீடுகளையும், விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். அதே சமயம் போராட்டங்கள் நடத்தியும் யானை அச்சுறுத்தலில் இதுவரை நிலையான பாதுகாப்பை வனதுறையினர் உறுதி செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News