கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைசவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-11 15:07 GMT

கோப்பு படம்

கொரோனோ பெருந்தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில்,  சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படாமல் இருந்தது. இங்கு நாள்தோறும் யானைகள் சவாரி நடைபெறுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா பரவல்  குறைந்ததை அடுத்து, தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த வாரம் யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, யானைகள் சவாரியும் துவங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், மீண்டும் இன்றுமுதல் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது கொரோனோ மற்றும் நிபா வைரஸ் எதிரொலியாக, யானைகள் பாதுகாப்பு கருதியும்,  அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தொற்று பரவாமல் இருக்க, யானைகளின் பாதுகாப்பு கருதியும்,  சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News