நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கிய யானை மீட்பு
உதகை பாடந்துறை பகுதியில் சேற்றில் சிக்கிய யானையை வனத்துறையினர் மீட்டனர்.;
சேற்றில் சிக்கிய யானை
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் உள்ள சேற்றில் சிக்கியது அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கூடலூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று, பல மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கிய காட்டுயானையை, பொதுமக்கள் துணையுடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.