கூடலூர் சேரம்பாடி பகுதியில் பழக்கடையை சூறையாடிய யானை

சேரம்பாடி பகுதியில் உள்ள பழக்கடையை சூறையாடிய காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்;

Update: 2021-11-21 05:46 GMT

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்த பழக்கடையை  நேற்று இரவில் சூறையாடிய காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி நகர் பகுதியில் இரவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த பழக் கடையை சூறையாடியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கூடலூர் , பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சேரம்பாடி நகர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை கொட்டும் மழையில் நனைந்தபடி பழ கடையை சூறையாடியதுடன் அங்கிருந்த வாழைத்தாரை எடுத்துச் சென்றது. அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News