கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், பசு மாட்டை தாக்கி கொன்ற புலியால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-09-18 05:36 GMT

கூடலூர் அருகே, புலியால் தாக்கப்பட்டு இறந்த பசுமாடு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில்,  கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும்,  சுமார் 6 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை,  புலி அடித்துக் கொன்றுள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதோபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்பாலா பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த பசு மாட்டை,  புலி தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதுபற்றி வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டும்,  வனத்துறை அமைச்சர் அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு புலியை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று,  கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இந்த பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வெளியே சென்றுவர அச்சம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள  கிராம மக்கள், தாமதமின்றி வனத்துறையினர் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News