நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 201 நிலையான மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் நோய் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,55,750 பேர், இரண்டாவது தவணை 5,36,021 பேர் என மொத்தம் 10,91,771 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.