நீலகிரியில் சேற்றில் சிக்கி இறந்த குட்டியானை: தாயின் பாசப்போராட்டம்

கூடலூரில், சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானை யாரையும் நெருங்க விடாமல், 2 நாட்களாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

Update: 2021-07-26 04:34 GMT

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானை அருகே உணவு, தண்ணீர் இன்றி இரண்டு நாட்களாக காத்துக் கிடக்கும் தாய் யானை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள செம்பாலா தேயிலைத் தோட்ட பகுதியில்,  கடந்த 10 நாட்களாக ஒரு குட்டியுடன் இரண்டு யானைகள் சுற்றி தெரிந்தது.  நேற்று முன்தினம் காலை அவ்வழியாக செல்லும் போது, நீரோடை சேற்றில் சிக்கி,  குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

அவ்வாறு உயிரிழந்த குட்டி யானையை, பிரேத பரிசோதனை செய்ய வன ஊழியர்கள் கால்நடை மருத்துவக் குழுவுடன் இறந்த குட்டி யானை அருகே சென்றபோது, இறந்த குட்டியின் அருகே தாய் யானையும் மற்றொரு யானையும் நின்றிருந்த நிலையில், வன ஊழியர்களை அருகே நெருங்கவிடவில்லை. இறந்த குட்டி அருகே நெருங்க விடாமல் தாய் யானை விரட்டியது.

இதனால்,  வன ஊழியர்கள் குட்டி யானையின் உடலை மீட்காமல் திரும்பினர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இறந்த குட்டி யானை உடல் அருகே தாய் யானையும் மற்றொரு யானையும், உணவு, தண்ணீர் இன்றி யாரையும் நெருங்க விடாமல் பாசப் போராட்டம் நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News