முதுமலையில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

பணி நிறைவு பெற்ற பின்னர் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து ஒவ்வொரு குழுவில் உள்ள வனஊழியர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

Update: 2021-11-25 16:12 GMT

கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள்.

முதுமலையில் இன்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 37 குழுக்களாக பிரிந்து 100 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் 5 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

நான்கு வனச்சரகங்கள் கொண்ட இந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து வருடந்தோறும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் இந்த வருடம் பருவமழை பிந்தைய கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் உட்பட 37 குழுக்களாக பிரிந்து 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் என்ற கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள செயலி, ஜிபிஎஸ் கருவி, தெர்மாமீட்டர், அதி நவீன பைனாகுலர் போன்றவற்றை வைத்து துல்லியமாக கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வனவிலங்குகள் நேரடியாக கண்காணிப்பது வனவிலங்குகளின் கால்தடம், எச்சம் போன்றவற்றை வைத்து இந்த பணியானது நடைபெற உள்ளது. இன்று முதல் 30ம் தேதி வரை இந்த பணி நடைபெறும் எனவும் 30ஆம் தேதி இந்த பணி நிறைவு பெற்ற பின்னர் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து ஒவ்வொரு குழுவில் உள்ள வன ஊழியர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags:    

Similar News