நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்து உள்ளது. கூடலூரில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்து உள்ளது.
இதுகுறித்து, தகவல் கிடைத்தவுடன் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணங்கள் தடுக்கப்பட்டன. நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல், இதுவரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 15 குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.