நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கம்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கியது.;
தமிழகத்தில் கடந்த 23-3-2019 கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழகம் கேரளா இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் இருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி இன்று முதல் தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியது.
மேலும் நீலகிரியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோவை வழி மார்க்கமாக பாலக்காட்டிற்கும்,கூடலூரில் இருந்து தாளுர் வழியாக சுல்தான் பத்தேரி மற்றும் நாடுகானி வழியாக நிலம்பூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி,சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி கேரளா மாநிலம் இடையேயான பொது போக்குவரத்து சேவை தொடங்கியதையடுத்து எல்லையோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.