பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் பாரத பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம்.;
இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாரத பிரதமரருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் அரசை கண்டித்து பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பரசுராமன், மாவட்ட துணை தலைவர் நளினி சந்திரசேகர், மண்டல் தலைவர் ரவிக்குமார், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், பிரச்சார அணி மாவட்ட துணை தலைவர் சாமி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், அமைப்பு சாரா பிரிவு மண்டல் தலைவர் விநாயக மூர்த்தி, அமைப்பு சாரா பிரிவு சுதேவன், மகளிர் அணி பொன்னம்மா, மண்டல் துணை தலைவர் ஹரி, முருகன், ராஜேஷ் பிரபு, இளஞரணி ஜெகன் செல்வகுமார் வினோத், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் பட்டியல் அணி மண்டல் தலைவர் ரவி நன்றி கூறினார்.