காய்கறிகளில் பா.ஜ.க சின்னம் : சமூக வலைதளங்களில் வைரல் !
தேர்தல் நடக்க உள்ள நிலையில் காய்கறிகளால் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒரு பெண் உருவாக்கி உள்ளார்.
தேர்தல் நடக்க உள்ள நிலையில் காய்கறிகளால் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒரு பெண் உருவாக்கி உள்ளார்.
ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து காட்சிகள் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஒவ்வொரு கட்சியும் தங்களது சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெண் ஒருவர் பீன்ஸ், கேரட், வெங்காயம், கருவேப்பிலை கொண்டு பாஜகவின் கொடி வர்ணத்தையும் தாமரையை பெரிய வெங்காயத்தைக் கொண்டும் உருவாக்கியுள்ளார். அந்த பெண் உருவாக்கியுள்ள அந்த சின்னம் புகைப்படமாக சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. காய்கறிகளைக் கொண்டு உருவாக்கியுள்ள அந்த சின்னம் வித்தியாசமான முறையில் உள்ளதாக பாராட்டை பெற்று வருகிறது.