மசினகுடி சாலையில் கரடி நடமாட்டம்: மரத்தில் முதுகை சொறிந்து உலா

கூடலூர் அருகே, மசினகுடி வனப்பகுதி சாலையில் நடமாடிய கரடியை, வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.;

Update: 2021-07-31 09:27 GMT

உதகையில் இருந்து முதுமலை செல்லும் சாலையில்,  மரத்தில் முதுகை சொறிந்து ஆனந்தமாக இருந்த கரடி.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் சாலையில், பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் அதிகமாக வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

பெரும்பாலும் கரடிகளின் நடமாட்டம் பகல் நேரங்களில் காண்பது மிகவும் அரிதான ஒன்று. இந்நிலையில் முதுமலை சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, சாலையின் ஓரத்தில் கரடி ஒன்ரு, மரத்தின் அருகே  நின்று,  தனது முதுகை ஆனந்தமாக சொறிந்து கொண்டிருந்தது. இந்த  காட்சியை சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள்,  அச்சத்துடன் படம் பிடித்தனர்.
அப்போது, வாகன ஓட்டிகளை நோக்கி கரடி ஓடி வந்ததது. இதை பார்த்து பீதியடைந்த பொதுமக்கள், உடனடியாக வாகனத்தை பின் நோக்கி எடுத்துச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறிது நேரம் மரத்தின் அருகே நடமாடிய கரடி, பின்பு வனப்பகுதிக்குள் சென்ற பிறகே அப்பகுதியில் இருந்து வாகனங்கள் சென்றன.

Tags:    

Similar News