உதகை - மைசூர் சாலையில் உலா வந்த கரடி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை.;

Update: 2022-03-09 11:05 GMT

மைசூர் நெடுஞ்சாலையில் உலா வந்த ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் கரடி.

உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் காத்திருந்து சாலையை கடந்து சென்ற கரடி, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக முதுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் அனைத்தும் கருகி வறண்டு காணப்படுகிறது.

இதனால் நீரோடைகள் உள்ள பகுதிகளில் வனவிலங்குகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் உதகையில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று சாலையோரத்தில் உள்ள நீரோடை பகுதியில் அமர்ந்து இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த கரடி அருகில் இருந்த தண்ணீர் குட்டையில் நீர் அருந்தி சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

அந்த காட்சியை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரத்தில் காட்டு யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி முகாமிட்டுள்ளது. அவ்வாறு முகாமிட்டுள்ள யானை போன்ற வனவிலங்குகள் சிலநேரங்களில் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News