முதுமலையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கரடி ஜாலி வாக்
மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹாயாக உலா வந்த கரடி, கரையான் புற்றுகளில் உணவு தேடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் ஒட்டியுள்ள மாநில எல்லை பகுதியில் கர்நாடகா பண்டிப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. உதகையில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலை பண்டிப்பூர் வழியாக தான் கர்நாடகாவுக்கு செல்ல முடியும். கொரோனா நோய்தொற்று காரணத்தினால் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதன் காரணத்தினால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலை ஓரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கரடி ஒன்று உலா வந்து கரையான் புற்றை உடைத்து அதிலுள்ள கரையானை உண்ண முயற்சி செய்கிறது. இதனை சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.