கூடலூரில் 7 கடைகள் மூடல் -9டீக்கடைகளுக்கு அபராதம்!!

டீக்கடைகளில் வாடிக்கையாளர்களை அமர வைத்தது தெரிய வந்தது . அந்தகடைகளுக்கு ரூ.3,700அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.;

Update: 2021-04-29 11:31 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு 3000 சதுர அடிக்குமேல் உள்ள வணிக நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கூடலூர் நகராட்சி பகுதியில் நேற்று ஆணையாளர் பாஸ்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசின் உத்தரவை மீறயதாக 3000 சதுர அடிக்கு மேல் உள்ள 7 வணிக நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, அக்கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதே போன்று 9 டீக்கடைகளில் வாடிக்கையாளர்களை அமர வைத்து இருந்தது தெரிய வந்தது. அந்தகடைகளுக்கு ரூ.3,700 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.தொடர்ந்து கூடலூர் நகரில் இந்த ரோந்து பணிகள் நடைபெறுமென அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News