உதகை அருகே அஞ்சலகத்தில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு: ஊழியர்கள், பொதுமக்கள் ஓட்டம்
உதகை அருகே மசினகுடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட பகுதியாகும். இங்கு யானை, புலி, மான், கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டிய கிராமப்புறங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது.
இந்நிலையில் மசினகுடி பஜார் பகுதி அஞ்சலக அலுவலக வளாகத்தில் பகல் நேரத்திலேயே நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் குடியிருப்புவாசிகள் பீதியடைந்தனர்.
இதையடுத்து பாம்பு பிடி வீரர் ஒருவர் அஞ்சலக அலுவலக வளாகத்தில் புகுந்த 5 அடி நாகப்பாம்பை அலேக்காக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் புகுந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.