சீகூர் யானை வழித்தடத்தில் தனியார் தங்கும் விடுதிகளை 3 குழுக்கள் ஆய்வு

சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கபட்டுள்ள தனியார் விடுதிகளை உச்ச நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட ஆய்வு குழு இன்று நேரில் ஆய்வு செய்தது.;

Update: 2021-10-09 08:33 GMT

சீகூர் சமவெளியில் உள்ள விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட 3 பேர் கொண்ட தனிக்குழு.

நீலகிரி மாவட்டம், சீகூர் சமவெளியில் உள்ள சிங்காரா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், செம்மநத்தம், சொக்கநள்ளி ஆகிய பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை மறித்து ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் கட்டபட்டுள்ளதால் யானை வழித்தடம் பாதிக்கபட்டுள்ளதாக கூறி  2008-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

அதனை விசாரித்த உயர் நீதீமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் தனியார் விடுதிகள் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் உயர் நீதிமன்றத்தில் அளித்ததாக புகார் தெரிவித்தனர். 

அந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு யானை வழித்தடத்தை  ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள 37 தனியார் தங்கும் விடுதிகளை சீல் வைக்க உத்தரவிட்டது. அதன் படி  தனியார் விடுதிகள் சீல் வைக்கபட்டது. மேலும்  யானை வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்றை 2020ஆம் ஆண்டு அமைத்தது.

அதனையடுத்து அந்த குழு முதற்கட்டமாக யானை வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியினர் மற்றும் பொதுமக்கள் பிரமானபத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவித்தது. 224 பேர் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.  அவர்களது இடத்திற்கு நேரில் சென்று குழுவினர் கட்டிடங்களையும் அவர்களது கருத்துகளையும் குழுவினர் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இன்று சீகூர் மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளில் சீல் வைக்கபட்டுள்ள தங்கும் விடுதிகளை திறந்து அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். கட்டிடங்களையும் அளவீடு செய்தனர்.

Tags:    

Similar News