கூடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ரோட்டரி சங்கம் சார்பில், 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி சங்கம் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.;
நீலகிரி மாவட்டம் மேற்கு மண்டல ரோட்டரி சங்கம் சார்பில், மேல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொரானா பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு கொண்ட நோயாளிகள் பயன்பெறும் வகையில், ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் ஸ்டீபன் குரூஸ் தலைமையில் நடைப்பெற்றது. மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை மருத்துவர் ஏஞ்சலீனா பெற்றுகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.