கூடலூரில் யானை தாக்கி ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.;
இந்நிலையில் அப்பகுதியில் இருந்து வெளியேறிய பாலகிருஷ்ணன் என்பவர் தேயிலை தோட்டம் வழியாக நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டு யானை கூட்டம் பாலகிருஷ்ணனை விரட்டிச் சென்று தாக்கியதில் , அவர் படுகாயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து யானையிடம் இருந்து பாலகிருஷ்ணனை மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின், பாலகிருஷ்ணன் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே யானை தாக்கி உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மீதம் உள்ள மூன்று லட்சத்து 50 ரூபாய் நிதி விரைவில் வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.