உதகை அருகே வனப் பகுதியில் யானை இறப்பு

15 மாத கர்பிணி யானை அழுகிய நிலையில் இறந்ததை வனத்துறையினர் கண்டறிந்துபிரேத பரிசோதனை செய்ததில் புலி யானையை கொன்றது தெரியவந்தது.;

Update: 2021-05-26 10:28 GMT

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் சிறுத்தைகள் கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன .

இந்நிலையில் மசனகுடி சிங்காரா வனத் தில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர் அப்போது ஆச்சங்கரை என்ற இடத்தில் பெண் யானையின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக துணை இயக்குனர் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடலின் ஒரு பகுதியை புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கடித்துக் கொன்றது தெரியவந்தது இதைத்தொடர்ந்து யானை இறந்து கிடக்கும் இடத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வனத்துறையினர் பொருத்தினர்.

கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது யானையின் உடலை புலி தின்பது உறுதிசெய்யப்பட்டது தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்  இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது பெண் யானையின் வயிற்றில் 15 மாத ஆண் குட்டி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது பின்னர் பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.

 இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது சிங்காரா வனப்பகுதியில் 15 வயது கர்ப்பிணி யானை உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதன் இழப்பு குறித்து ஆய்வு செய்த போது யானை சேற்றில் வழுக்கி கீழே விழுந்து அதன் பின்னர் காட்டு யானையை புலி அடித்துக் கொன்றுள்ளது என அவர் கூறினார்.

Tags:    

Similar News