முதுமலையில் பெண் யானை பலி-வனத்துறை விசாரணை

Update: 2021-03-16 06:00 GMT

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பெண்யானை உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்தில் வனசரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் கள பணியாளர்களின் ரோந்து பணியின் போது கக்கநல்லா வன காவல் பகுதியில், கோவில் குளம்குட்டை அருகே, பெண் யானை குட்டி இறந்துள்ளது தெரிய வந்தது. இறந்த பெண் யானை குட்டியின் உடல் அருகே மயில் புலியின் கால் தடங்கள் உள்ளது.

பெண் யானை குட்டியின் உடலில் சில பாகங்களை வன விலங்கு உட்கொண்டது என்பது முதற்கட்ட கள தணிக்கையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் இயக்குனர் கௌசல், துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி கால்நடை மருத்துவரைக் கொண்டு இறந்த பெண் குட்டியானையின் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் யானையின் இறப்பு குறித்த விவரம் தெரியவரும்.

Tags:    

Similar News