கிராமத்தில் புகுந்த காட்டு யானை: பொது மக்கள் பீதி
இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிமலை பகுதியில் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். பல கிராமங்களில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகளால் மனித உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கூடலூர் அருகே கோழிமலை பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.