கோவிலை சூறையாடிய யானைக் கூட்டம்

கூடலூர் பகுதிகளிலுள்ள கிராமங்களில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் கோவிலை சேதப்படுத்தியது இதனால் பொதுமக்கள் அச்சம்.;

Update: 2021-02-13 14:45 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா தேவாலா - ஏரோடு-1வது ரேஞ் பகுதியில்  5 மணி அளவில் ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம் அங்கிருந்த கோயில் வளாகத்துக்குள் சென்று மேற்கூரை மற்றும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தியது . தொடர்ந்து இப்பகுதில் உலா வரும் காட்டு யானைகளால் பொது மக்கள் வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சேதமடைந்த கோவில் வளாகத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்  காட்டு யானைகளை அடர் வனத்தில் விரட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News