கூடலூர் அருகே காட்டு யானை பிடிபட்டது
கடந்த ஒரு வாரமாக பந்தலூரில் வனத்துறையினருக்கு பிடிபடாத காட்டு யானை சங்கர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.;
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று பேரை பந்தலூரில் கொன்ற யானையைப் பிடிக்க வேண்டுமென பல தரப்பினரிடையே தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. வனத்துறையினரும் கும்கி யானை உதவிகளுடன் கடந்த ஒரு வாரமாக ஆட்கொல்லி யானையைப் பிடிக்க மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் தப்பித்த காட்டு யானை அப்பகுதியில் சுற்றிதிரியும் மற்ற யானைகளுடன் தஞ்சமடைந்தது மற்ற யானைகளும் இந்த காட்டு யானைக்கு அரணாக நின்று அதைப் பாதுகாத்து வந்தன. இது வனத்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது இரவு பகல் பாராமல் வனத்துறையினர் காட்டு யானையை கண்காணித்து இன்று மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து பிடித்தனர்.
பிடிபட்ட காட்டுயானை முதுமலை தெப்பக்காடு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போக்குக் காட்டி வந்த காட்டுயானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.