உதகை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி

உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இருந்த பழடைந்த தொட்டியில் தவறி விழுந்த கரடியை சிங்காரா வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.;

Update: 2021-02-11 09:18 GMT

உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி சிங்காரா வன பகுதி உள்ளதாலும் எஸ்டேட் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதாலும் காட்டுயானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் எஸ்டேட் பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த எஸ்டேட்டில் உள்ள பாழடைந்த தண்ணீர் தொட்டியில் கரடி ஒன்று தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் சத்தமிட்டு கொண்டிருந்தது. சத்தம் கேட்டு சென்று பார்த்த தொழிலாளர்கள் சம்பவம் குறித்து உடனடியாக சிங்காரா வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து சென்ற வனத்துறையினரை கண்ட கரடி ஆக்ரோசமாக தாக்க வந்தது.

பின்னர் தொட்டிக்குள் அங்கும் இங்குமாக ஓடிய கரடி தொட்டியில் இருந்து வெளியில் வர வசதியாக மரக்கிளையை பக்கவாட்டில் வனத்துறையினர் வைத்தனர். அதனையடுத்து அந்த கரடி மரக்கிளையில் ஏறி தொட்டியில் இருந்து வெளியில் வந்தது வனபகுதிக்குள் சென்றது.

Similar News