முதுமலைக்கு கொண்டு செல்லப்படும் யானைகள்
வாழைத்தோட்டம் பகுதியில் ரிவால்டோ என்கின்ற ஒற்றை காட்டு யானையை பழங்கள் கொடுத்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.;
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் அவ்வப்போது ரிவால்டோ என்கிற காட்டு யானை ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சம் அடைந்தனர் . இந்நிலையில் வனத்துறையினர் இன்று யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .இன்று இதற்கான பணி துவங்கப்பட்டு வனப்பகுதிக்குள் இருந்த காட்டு யானையை தர்பூசணி ,கரும்பு ,போன்றவை கொடுக்கப்பட்டு வனப்பகுதி வழியாக மயக்க ஊசி செலுத்தாமலும் கும்கி யானைகள் துணை இல்லாமலும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.