குத்தகை செலுத்தாத தேயிலை தோட்டம் கையகப்படுத்தல்

Update: 2021-01-13 10:00 GMT

நீலகிரி மாவட்டத்தில் வருவாய்துறைக்கு 3.5 கோடி ரூபாய் குத்தகை பாக்கி செலுத்தாத தனியார் தேயிலை தோட்டம் மற்றும் அதற்கு சொந்தமான பங்களாவை வருவாய்துறையினர் கையகப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பிதர்காடு, சோலாடி பகுதியில் 25 ஏக்கர் பரப்பிலான தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த தோட்டமும் அதனுள் ஒரு பங்களாவும் உள்ளது. வருவாய்துறை நிலத்தில் உள்ள இந்த தோட்டத்தை குத்தகை எடுத்து ஒருவர் நடத்தி வருகிறார்.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த நிலையில் அந்த தோட்டம் பலருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தோட்டத்தை குத்தகை எடுத்தவர் தற்போது வரை 3.5 கோடி ரூபாய் குத்தகை தொகையை வருவாய் துறையினருக்கு செலுத்தாமல் இருந்தாராம். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவுபடி வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தோட்டத்தை கையகப்படுத்தினர். இதையடுத்து தேயிலை தோட்டம் மற்றும் பங்களா முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News