நீலகிரி - ஆனைக்கட்டி பகுதியில் யானை தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வன சரகத்திற்கு உட்பட்டஆனைக்கட்டி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி.;

Update: 2020-12-16 03:42 GMT

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்தவர் இருளர் பழங்குடியினப் பெண் சரசு வயது 65. இவர் தனது மகன் பாலன் வயது 42, மற்றும் சகோதரி மதி 55 ஆகிய மூவரும் குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்த காட்டுயானை கண்ட மூவரும் ஓட்டம் பிடித்த நிலையில் சரஸ்வதியை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் இருவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவத்தை அறிந்து வனத்துறையினர் தேனாடுக்கம்பை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத் துறையினர் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெவ்வேறு இடங்களில் காட்டுயானை தாக்கி இதுவரை மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News