கூடலூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்: அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி?

கூடலூரில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-03-02 15:15 GMT

கூடலூர் அரசு மருத்துவமனை ஊழியர் தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் ஏசுதாஸ்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நாராயண மூர்த்தி என்பவர் அதே மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ள ஏசுதாஸ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் தன்னைத் தாக்கிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தன்னை தாக்கிய அரசு மருத்துவமனை ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியும் பின்பு தாக்கியதாக கூறிய ஆம்புலன்ஸ் டிரைவர் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்க போவதில்லை என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நாராயண மூர்த்தி என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் அதிகமாக கையூட்டு பெறுவதாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News