கழிவறை பிரச்சினை - மக்களின் வேண்டுகோள்
கழிவறை பிரச்சினை தீவிரம், பெண்கள் எதிர்கொள்ளும் அவதியில் அவசர நடவடிக்கை;
கழிவறையின்றி அவதி
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டியவலசு பஞ்சாயத்து கிழக்கு வலசு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நலன் கருதி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த பெண்கள் கழிவறை கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால், இந்த கழிவறை சில ஆண்டுகளாக பூட்டப்பட்டே கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி பெண்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, தொட்டியவலசு பஞ்சாயத்து கிழக்கு வலசு பகுதியில் பெண்கள் நலன் கருதி, கழிவறையைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.